முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு 7.33 லட்சம் தடுப்பூசிகள் 2 வாரங்களில் அனுப்பப்படும்: மத்திய அரசு

சனிக்கிழமை, 1 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : தமிழகத்திற்கு 2 வாரங்களில் 7.33 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. 

தடுப்பூசி பற்றாக்குறையால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கவில்லை. குறைவான எண்ணிக்கையில் தடுப்பூசி கிடைப்பதால் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் மேலும் கால தாமதம் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.

நேற்று முதல் 18 வயது மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், பல மாநிலங்களில் தடுப்பூசி கையிருப்பு இல்லை எனக் கூறி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நேற்று தடுப்பூசி போடப்படவில்லை.

தமிழகத்திற்கு 1.5 கோடி தடுப்பூசிகள் வழங்குமாறு தமிழக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்தி இருந்தது. இந்த நிலையில் தமிழகத்திற்கு 2 வாரங்களில் 7.33 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து