முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு : மனுதாரருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

திங்கட்கிழமை, 31 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றம் உள்ளடங்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட்  மறுப்பு தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 94 ஆண்டுகள் பழமையானது. இதை கட்டும்போது ரூ.83 லட்சம் செலவானது. இந்த கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டி 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட உள்ளது. இதற்காக ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமை செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன.

அதி நவீன வசதிகளுடன் கட்டப்படும் புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடியாகும். 21 மாதங்களில் அதாவது 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

சென்ட்ரல் விஸ்டா திட்ட பணிகளை மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இரண்டு வாரங்களுக்கு முன் டெல்லி ஐகோர்ட் தீர்ப்பிணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றம் உள்ளடங்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு எந்தவிதமான தடையும் விதிக்க முடியாது என திட்டவட்டமாக நீதிபதிகள் தெரிவித்தனர். 

மேலும், மனுதாரர் மனு தொடர்ந்ததில் உள்நோக்கம் உள்ளது என கூறி அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதத்தை டெல்லி ஐகோர்ட்  உத்தரவிட்டுள்ளது. இது ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாவசிய பணி என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து