முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூமியை நோக்கி அதிவேகத்தில் வரும் பிரம்மாண்டமான சிறுகோள் கண்காணித்து வருகிறது நாசா

புதன்கிழமை, 21 ஜூலை 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன்: 2008 கோ20 என்ற பிரம்மாண்டமான சிறுகோள் பூமியை நோக்கி அதிவேகத்தில் வருவதாகவும், நாளை மறுதினம் 24-ம் தேதி அன்று அது பூமியை கடந்து பறக்கும் என நாசா தெரிவித்துள்ளது.

சூரிய குடும்ப உருவாக்கத்திற்கு பிறகான சிதைவுகள் சிறுகோள்கள் எனப்படுகின்றன. லட்சக்கணக்கான சிறுகோள்கள் அப்படி உருவாகி வலம் வந்துக் கொண்டுள்ளன. அதில் 2008 கோ20 என்ற சிறுகோள் தற்போது பூமிக்கு அருகில் உள்ளது. மணிக்கு 29 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த சிறுகோளானது மூன்று தாஜ்மகால் அளவு இருப்பதாக நாசா மதிப்பிட்டுள்ளது. அதிவேகத்தில் இந்த கோள் பயணிப்பதால் அதன் பாதையின் குறுக்கே எது வந்தாலும் தகர்த்தெறியப்படும்.

பூமிக்கு அருகிலுள்ள பொருட்கள் பற்றிய நாசாவின் தரவுத்தளத்தின்படி, இந்த சிறுகோள் 220 மீட்டர் விட்டம் கொண்டது. 287 கோடி கிலோ மீட்டர் தொலைவில் பறக்கிறது. அது பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தொலைவை போன்று 8 மடங்காகும். அதனால் இந்த சிறுகோள் பூமியைக் கடந்து பாதுகாப்பாக நகரும் என்று நாசா கூறியுள்ளது. பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றாலும் நாசா தொடர்ந்து சிறுகோளை கண்காணித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து