முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி கன்ஜூரிங் மூன்றாம் பாகம்

சனிக்கிழமை, 28 ஆகஸ்ட் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

தி கன்ஜூரிங் என்ற திகில் பட தொடரின்   மூன்றாவது பாகம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதன் முந்தைய இரு பாகங்களையும் தயாரித்து இயக்கியிருந்தவர், James Wan. பெரு வெற்றி பெற்ற முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் தென்பட்ட அம்சங்களின் சாயல் இந்த மூன்றாம் பாகத்திலும் பிரதிபலித்து விடக்கூடாது என்கிற ஒரு கண்ணோட்டத்திற்க்காக மூன்றாம் பாகத்தின் இயக்குனர் பொறுப்பை வேறு ஒரு இயக்குனரிடம் ஒப்படைத்து விட்டாராம் James Wan. கொலை வழக்கொன்றில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவன் தன்னுள் ஒரு அமானுஷ்ய சக்தி புகுந்துகொண்டு தன்னை சில செயல்களைச் செய்யுமாறு ஆட்டுவித்ததாக தனது தற்காப்பு வாதத்தில் குறிப்பிடுகிறான்! 

அமானுஷ்ய சக்திகளுடைய  நடவடிக்கைகள்  பற்றி ஆராய்ச்சி செய்யும் Ed  Warren மற்றும் Lorraine Warren  ஆகிய இருவருக்குமே இந்த வழக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அவர்களது ஆராய்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு நடக்கிறது இந்த வழக்கு!  படத்தின் ஒளிப்பதிவை Michael புரோஜெஸ் கையாள Joseph Bishara  இசையமைத்துள்ளார். அமானுஷ்ய சக்திகளால் ஆட்கொள்ளப்பட்ட, எட்டு வயது பாலகனாக Julian Hilliard நடித்துள்ளார். 

அமானுஷ்ய சக்திகளை பற்றிய படங்களில் இப்படம் ஒரு மைல்கல்லாக அமையும் என்கிறார் படத்தின் இயக்குனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து