முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுதங்களை ஏவக்கூடிய நீர்மூழ்கி கப்பல்களை வாங்கும் ஆஸி. முடிவிற்கு சீனா கண்டனம்

வெள்ளிக்கிழமை, 17 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

அணு ஆயுதங்களை ஏவக்கூடிய நீர்மூழ்கி கப்பல்களை வாங்கும் ஆஸ்திரேலியாவின் முடிவிற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ஆஸ்திரேலியா அணு ஆயுத தாக்குதலுக்கு இலக்காகலாம் என்று சீன அரசு ஊடகம் பகீரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பகுதிக்கு புதிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டமைப்பை அறிவித்துள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவே இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக மூன்று நாடுகளும் கூட்டாக அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த கூட்டணியில் ஆஸ்திரேலியாவுக்கு அணு ஆயுத்தை ஏவும் திறன் கொண்ட 8 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க தேவையான தொழில்நுட்பத்தை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடன் ஆஸ்திரேலிய அரசு செய்துகொண்ட ஒப்பந்தம் முறிவடைந்துள்ளது.  

இந்நிலையில், அணு ஆயுதங்களை ஏவக்கூடிய திறன்கொண்ட நீர்மூழ்கி கப்பல்களை ஆஸ்திரேலியா வாங்குவதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா கூட்டணி பிராந்திய அமைதி, நிலைத்தன்மைக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளார்.

 

மேலும், அணு ஆயுத வல்லமை கொண்ட நீர்மூழ்கி கப்பல்களை வாங்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அணு ஆயுத தாக்குதலுக்கு இலக்காகலாம் என்று சீன அரசு ஊடகமான தி குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து