முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதைப்பொருள் கும்பல் தாக்குதல்: கொலம்பியா வீரர்கள் 4 பேர் பலி

திங்கட்கிழமை, 8 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

கொலம்பியாவில் ராணுவத்தினர் மீது போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் உயிரிழந்தனர்.

தென் அமெரிக்க நாடுகளில் கொலம்பியாவும் ஒன்று. அந்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. கொலம்பியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் இருந்து உலகின் பிற பகுதிகளுக்கு பெருமளவு போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. 

போதைப்பொருள் கடத்தலை தடுக்க கொலம்பிய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் அரங்கேறி வருகிறது.

இதற்கிடையில், அந்நாட்டின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஒடோனியல் என்பவரை ராணுவத்தினர் கடந்த மாதம் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஒடோனியல் போதைப்பொருள் கடத்தலுக்கென்றே கல்ஃப் கிலன் என்ற தனி படை ஒன்றையும் உருவாக்கியுள்ளார். இந்த போதைப்பொருள் கடத்தல் படையில் அதிநவீன ஆயுதங்களுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர். 

இந்நிலையில், அந்நாட்டின் அண்டிகுவா மாகாணம் இட்வாங்கோ பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்களை குறிவைத்து ஒடோனியலின் கல்ஃப் கிலன் போதைப்பொருள் கடத்தல் பிரிவினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கொலம்பிய ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து