முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுக்கு டிரைவிங் லைசென்சு வழங்க ஆப்கானிஸ்தானில் தடை

வியாழக்கிழமை, 5 மே 2022      உலகம்
Driving-license-for-women-2

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சில பெண்கள் வாகனங்களை ஓட்டி வந்ததை அறிந்த தலிபான்கள் தற்போது அங்கு பெண்களுக்கு டிரைவிங் லைசென்சு வழங்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு பெண்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தனியாக பெண்கள் பயணம் செய்யக் கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. எந்த நேரமும் தலிபான்கள் வீதிகளில் துப்பாக்கியுடன் ரோந்து சுற்றி வருகின்றனர்.  

இந்த நிலையில்  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சில பெண்கள் வாகனங்களை ஓட்டி வந்தனர். இதையறிந்த தலிபான்கள் தற்போது அங்கு பெண்களுக்கு டிரைவிங் லைசென்சு வழங்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து