முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12-ம் வகுப்பு மாணவி சிந்துவின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 6 மே 2022      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை : படுத்த படுக்கையாக தேர்வு எழுதிய 12-ம் வகுப்பு மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த வாலிபால் வீராங்கனையான 12-ம் வகுப்பு மாணவி சிந்து கடந்த ஆண்டு வீட்டின் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் இரு கால் எலும்புகளும் முறிந்தன. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிந்துக்கு 10-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக படுத்த படுக்கையாக மாணவி சிந்து தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வினை மாணவி சிந்து படுத்த படுக்கையாக எழுதியுள்ளார். இது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. இந்த நிலையில், 12-ம் வகுப்பு மாணவி சிந்துவின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

வினைத்திட்பம் என்பதொருவன் மனத்திட்பம்,  கடுமையான நெருக்கடிகளின்போதுதான் ஒருவரின் மனவுறுதி வெளிப்படும்.  விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்.

தடைகள் வரினும் சோர்ந்து போகாமல் எதையும் முயன்று பார்க்கும் மனவலிமையை சிந்துவைப் பார்த்து மாணவர்கள் கைக்கொண்டு, தேர்வுகளைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.  மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்றத் தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும். இவ்வாறு அதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து