முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனின் 2-வது பெரிய நகரத்தில் இருந்து பின் வாங்கும் ரஷியா

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2022      உலகம்
Ukraine 2022 05 15

Source: provided

மாஸ்கோ : உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 81 நாட்களாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷியா பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனும் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவிற்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.ரஷியா சில வாரங்களுக்கு முன் மரியுபோல் நகரத்தை பிடித்ததாக அறிவித்தது.

அதேபோன்று உக்ரைனின் 2வது மிகப்பெரிய நகரமான கார்கீவ் நகரத்தின் மீது ரஷியா தொடர் தாக்குதல்களை நடத்தியது. ஏவுகணை தாக்குதல், டாங்கிகள் மூலம் தாக்குதல் என பல்வேறு தாக்குதல்களை கார்கீவ் நகர் மீது நடத்திய நிலையில், தற்போது அந்நகரத்தில் இருந்து தனது துருப்புகளை பின்வாங்குவதாக ரஷியா அறிவித்துள்ளது.

கார்கீவ்வில் இருந்து பின்வாங்கும் ரஷியா, தனது வணிக பாதைகளை காப்பதற்காக, கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் டொனெட்ஸ்க் மீது பல்முனை தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. டொனெட்ஸ்க் நகரம் உக்ரைனின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் நகரமாக உள்ளது. மேலும் தொழிற்சாலைகள் மற்றும் அறிவியல் துறையின் மையமாகவும் விளங்குகிறது.

இதுகுறித்து ரஷிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் கூறுகையில், உக்ரைன் புதிய, நீண்டகால போர் கட்டத்திற்கு நுழைவதாக சுட்டிக்காட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து