முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் போராட்டங்களுக்கு மத்தியில் ஜூன் 24 முதல் அக்னிபத் திட்டத்திற்கு ஆட்சேர்ப்பு : இந்திய விமானப்படைத் தளபதி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2022      இந்தியா
Manoj-Pandey 2022 06 17

Source: provided

புதுடெல்லி : அக்னிபத் போராட்டங்களுக்கு மத்தியில் ஜூன் 24 முதல் ஆட்சேர்ப்பு தொடங்கும் என இந்திய விமானப்படை தளபதி கூறி உள்ளார். 

நாடு முழுவதும் 'அக்னிபத் ஆள்சேர்ப்பு திட்டத்திற்கு' எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லி, அரியானா, ராஜஸ்தான், பீகார், வங்காளம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. ரெயில் பெட்டிகள் எரிப்பு சம்பவங்களால் நாடு முழுவதும் 200 ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, விரைவில் அக்னி பாதை திட்டத்தின் கீழ் முதல் பேட்ச் ஆள் சேர்ப்புக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இளைஞர்கள் அனைவரும் அக்னி வீரர்களாக இணைய வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், கடந்த 2 ஆண்டுகளாக கரோனா காரணமாக ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறாததால் வாய்ப்புகளை இழந்த இளைஞர்களின் நலனுக்காக அரசாங்கம் வயது வரம்பை 23 ஆக அதிகரித்துள்ளது. இது இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு என்றும் அவர் கூறியுள்ளார். 

 

'அக்னிபத் திட்டத்தின்' கீழ் இந்திய விமானப்படையில் அக்னிவீரர்களுக்கான ஆட்சேர்ப்பு ஜூன் 24, 2022 முதல் தொடங்கும் என்று இந்திய விமானப்படைத் தளபதி மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படை தளபதி மார்ஷல் விஆர் சௌத்ரி கூறுகையில், "உயர்ந்த வயது வரம்பு (ஆட்சேர்ப்புக்கான) 23 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதன் மூலம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள். இந்திய விமானப்படைக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை ஜூன் 24 முதல் தொடங்குகிறது. முன்னதாக, நாட்டின் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கும்போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்காக, அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து