முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில் புரிய ஏதுவான மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 3-வது இடம் : டுவிட்டரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2022      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை : தொழில் புரிய ஏதுவான மாநிலங்களுக்கான தரவரிசையில் தமிழகம் 3-வது இடத்தை பெற்றதற்காக தொழில் துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

தொழில் புரிய ஏதுவான மாநிலங்களுக்கான தரவரிசையில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுள் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது. புள்ளிகள் அடிப்படையில் பார்த்தால், 14-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்குத் தாவியிருக்கிறோம்.

தொடர்ச்சியான திட்டமிட்ட நடவடிக்கைகளால் முதலீடுகளுக்கான முக்கிய மையமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ள தொழில்துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு மற்றும்  துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க .ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து