முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாளில் 47 பேர் பலி: இந்தியாவில் 20,409 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2022      இந்தியா
India-Corona 2022-07-23

Source: provided

புதுடெல்லி : நாட்டில் வியாழக்கிழமை கொரோனா பாதிப்பு 20,577 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் புதிதாக 20,409 ஆக அதிகரித்துள்ளது. 47 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது., வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 20,577 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேலும் புதிதாக 20,409 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,39,79,730-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,43,988 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.33 சதவீதமாக உள்ளது. தொற்று பாதித்தவர்களில் புதிதாக 47 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,26,258 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.20 சதவீதமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 19,216 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,33,09,484-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.48 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து