முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படப்பிடிப்பின் போது தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் பெப்சி தீர்மானம்

வியாழக்கிழமை, 25 ஜூலை 2024      தமிழகம்
Movie-Shoot

Source: provided

சென்னை: எங்களின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் நாங்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டோம் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) அறிவித்துள்ளது.

கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலைஉயிரிழந்தார். இதையடுத்து படப்பிடிப்புகளில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) சார்பில் வியாழக்கிழமை சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை முன்னிட்டு சென்னையில் இன்று ஒருநாள் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதில் பல்வேறு 7 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. 

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, “தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. ‘இந்தியன் 2’ தொடங்கி ‘சர்தார் 2’ வரை 25 பேர் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டு அகால மரணமடைந்துள்ளனர். தகுந்த பாதுகாப்பு இல்லாமல், சில நேரங்களில் அலட்சியம், கவனக்குறைவின்மை, போதிய வசதிகள் இல்லாததால் இந்த விபத்துகள் ஏற்படுகின்றன. பலமுறை நாங்கள் இது குறித்து பேசி வருகிறோம். இம்முறை முதன் முறையாக சம்பந்தப்பட்ட அனைத்து சங்க உறுப்பினர்களையும், அழைத்து பேசியுள்ளோம். பாதுகாப்பு என்பது நம் உயிர் தொடர்புடைய விஷயம். அலட்சியம், கவனக்குறைவு இருக்க கூடாது என்பது குறித்து விரிவாக கூட்டத்தில் பேசினோம்.

இதில் தயாரிப்பாளர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. போதிய வசதிகள் செய்து தர வேண்டும் என்பது தான் தயாரிப்பாளர்களின் கடமை. அதன்பிறகு நடக்கும் சிக்கலுக்கு ஏதோ ஒரு உறுப்பினர் தான் காரணமாக இருக்கிறார். கடைசியாக நிகழ்ந்த விபத்தில் கூட, படப்பிடிப்பு தளத்தில் கயிறு உறுதியாக இல்லாமல் அறுந்து விழுந்துள்ளது. இதனை உறுதி செய்வது தயாரிப்பாளரின் வேலையில்லை. சம்பந்தப்பட்ட உதவியாளரோ, ஸ்டூடியோ பொறுப்பாளரோ தான் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் எங்களின் உறுப்பினர்களுக்கு 60-70 சதவீதம் பொறுப்பு உண்டு. எங்கள் உறுப்பினர்களுக்கும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதால் அவர்கள் அனைவரையும் அழைத்து பேசியுள்ளோம்.

எங்களுக்குத் தெரிந்த மற்றொரு பிரச்சினை என்னவென்றால், சீக்கிரம் செட் அமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இன்றுக்கு ஜூலை 25-ம் தேதி என வைத்துக்கொண்டால், திடீரென்று ஒரு ஹீரோ அழைத்து ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் படப்பிடிப்பு வைத்து கொள்ளலாம் என்கிறார். 3, 6 மாதம் முன்பு சொல்லவேண்டும். ஒரு செட் போட வேண்டுமென்றால், 45 முதல் 50 நாட்கள் தேவைப்படும். காரணம் இன்றைக்கு எல்லாமே பிரமாண்ட செட்டாக மாறிவிட்டது.

எங்கள் உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடும், விபத்து காப்பீடும் தயாரிப்பாளர் ஏற்படுத்தி தர வேண்டும். படப்பிடிப்பு தளங்களில் ஆம்புலன்ஸை வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பவை எங்களின் குறைந்தபட்ச கோரிக்கை. பாதுகாப்பு பெல்ட் கொடுக்க வேண்டும். க்ளவுஸ், ஷூ உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் இதனை அமல்படுத்த வேண்டும். இதனை ஏற்பாடு செய்து கொடுக்காவிட்டால் ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் நாங்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டோம். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தங்களின் 1 சதவீத ஊதியத்தை கொடுங்கள் என கூறினோம். அது குறித்து யாரும் கண்டுகொள்ளாதது வருத்தமளிக்கிறது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து