முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை தேர்தலுக்கு பிறகு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2024      இந்தியா
amit-shah 1

ஜம்மு, சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார். 

காஷ்மீர் சட்டசபை தேர்தல் தொடர்பாக பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா  நேற்று முன்தினம் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து  அம்மாநில  பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ள அவர்  நேற்று  பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது,

 காஷ்மீரில் வரவிருக்கும் தேர்தல்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. ஏனென்றால் சுதந்திரத்திற்குப் பிறகு, நமது தேசியக் கொடி மற்றும் அரசியலமைப்பின் கீழ் தேர்தல்கள் முதன்முறையாக நடக்கின்றன. 

இரண்டு கொடிகள் மற்றும் இரண்டு அரசியலமைப்புகளின் முந்தைய நடைமுறையைப் போல் இல்லாமல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்களுக்கு ஒரே ஒரு பிரதமர் மோடிதான் என்ற அடிப்படையில் நடைபெறும் தேர்தல் இது. 

மோடி அரசாங்கத்தால் 370-வது பிரிவை ரத்து செய்ததைத் தொடர்ந்து நடைபெறும்  முதல் தேர்தல். ஆனால் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கூட்டணி பழைய முறையைப் புதுப்பிக்க முயற்சிக்கிறது. எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்க   தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் அனுமதிக்காது.

யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாத சம்பவங்களை அரசாங்கம் 70 சதவீதம் குறைத்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீரை மீண்டும் பயங்கரவாதத்தின் நெருப்பில் தள்ள அவர்கள் முயற்சிக்கிறார்கள்.  சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.  

தேசிய மாநாடு மற்றும் காங்கிரசால் ஒருபோதும் காஷ்மீரில் ஆட்சி அமைக்க முடியாது. நமது கட்சியினர் அந்த  நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அடுத்த அரசாங்கத்தை அமைக்க பா.ஜ.க. வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யுங்கள். இவ்வாறு அமித்ஷா பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து