முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தா பானர்ஜியை தவிர நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த இன்டியா கூட்டணியின் முதல்வர்கள்

வியாழக்கிழமை, 25 ஜூலை 2024      இந்தியா
INDIA 2023-08-30

Source: provided

புதுடெல்லி: மம்தா பானர்ஜியை தவிர நிதி ஆயோக் கூட்டத்தை இன்டியா கூட்டணியின் முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர்.

மத்திய பட்ஜெட்டில் இன்டியா கூட்டணி ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பிய எதிர்க்கட்சிகள், நாளை (27-ம் தேதி) பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சுகு புறக்கணிப்பை உறுதி செய்துள்ளனர்.

இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் பாராளுமன்றக் குழுத் தலைவர் இன்டியா கூட்டணியின் கூட்டத்திலும், புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்திலும் கலந்து கொண்டனர். ஆனால், நிதி ஆயோக் கூட்டத்தை மம்தா புறக்கணிப்பாரா? கலந்து கொள்வாரா? என்ற கேள்வி நிலவி வந்த நிலையில், அவர் கலந்து கொள்வது நேற்று உறுதியாகியுள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு, மாநிலத்துக்கு வரவேண்டிய நிதி குறித்து நேரடியாக பிரதமரிடம் கேள்வி எழுப்புவேன் என்று ஏற்கெனவே மம்தா தெரிவித்திருந்தார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை டெல்லி செல்லும் மம்தா, பாராளுமன்றத்தில் கட்சி எம்பிக்களை சந்தித்து ஆலோசிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் போதே, மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும், இன்டியா கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பேன் என்று மம்தா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இன்டியா கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பகவந்த் மான் கலந்து கொள்ள மாட்டார் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என்றும், மத்திய பட்ஜெட் பாரபட்சமானது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், ஆம் ஆத்மி இந்த முடிவை எடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து