முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசா விவகாரத்தில் அமைதியாக நான் இருக்கப்போவதில்லை : கமலா ஹாரிஸ் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2024      உலகம்
Kamala-Netanyahu 2024 07

Source: provided

 வாஷிங்டன் : காசா விவகாரத்தில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை என்று அமெரிக்க தேர்தல் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

 இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று முன்தினம் அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் காமலா ஹாரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் அமைதிக்கான உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ளும்படி நெதன்யாகுவை ஜோபைடன் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள கமலா ஹாரிஸ் நெதன்யாகுவிடம் பேசுகையில், காசாவில் கடந்த 9 மாதங்களாக நடந்தவை கொடூரமானது. மக்களின் அவல நிலையையும் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியவில்லை.  இவற்றைக் கண்டு நான் அமைதியாக இருக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். 

மேலும்  நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமலா ஹாரிஸ், தன்னைத் தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருக்கிறது. அதே வேளையில் காசாவில் மக்கள் சந்திக்கும் துயரத்தை பற்றிய எனது அக்கறையை நெதன்யாகுவிடம் மிகத் தெளிவாக முன்வைத்தேன். இந்த விஷயத்தில் நான் அமைதியாக இருக்கப் போவதில்லை. இந்த விவகாரத்தில் உணர்ச்சியற்றவர்களாக மாற முடியாது என்று தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து