முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுக்கு சங்கர் ஆட்கொணர்வு வழக்கு: விசாரணையில் இருந்து விலகுவதாக ஐகோர்ட் நீதிபதிகள் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2024      தமிழகம்
Chavik-Sankar 2024-05-27

Source: provided

 சென்னை : யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக ஐகோர்ட் நீதிபதி எம்.எஸ். ரமேஷ் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாய் கமலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று  விசாரணைக்கு வந்தது. 

அப்போது, சவுக்கு சங்கர் தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.  வாதங்களின் போது, சுப்ரீம் கோர்ட்டில் சவுக்கு சங்கரின் தாய் தரப்பு தாக்கல் செய்த மனுவில், ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் ஐகோர்ட் அமர்வு குறித்து சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கை நாங்கள் விசாரிக்க விரும்பவில்லை. இந்த வழக்கை நாங்கள் விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே வழக்கின் விசாரணையில் இருந்து விலகுகிறோம். இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றும்படி பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறோம் என்று கூறி விலகினர்.  

தொடர்ந்து பொறுப்பு தலைமை நீதிபதி எந்த அமர்வுக்கு இந்த வழக்கை ஒதுக்கீடு செய்கிறாரோ அந்த அமர்வு இனி விசாரிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து