முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் மத்திய பா.ஜ.க. அரசு : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2024      தமிழகம்
Udayanidhi-1 2023-10-1

Source: provided

சென்னை : ஓரவஞ்சனையின் மொத்த வடிவம்தான் மத்திய பா.ஜ.க. அரசு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய  அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள புள்ளி விவரம், ஓரவஞ்சனையின் மொத்த வடிவம்தான் மத்திய பா.ஜ.க. அரசு என்பதற்கான சான்றாக உள்ளது. 

கடந்த 7 ஆண்டுகளில், பா.ஜ.க. ஆளும் உத்தர பிரதேசத்துக்கும், குஜராத்துக்கும் தலா ரூ.400 கோடிக்கு மேல் தந்து தாராளம் காட்டியிருக்கிற மத்திய அரசு, தமிழகத்திற்கு வெறும் ரூ.20 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.

உலக செஸ் போட்டி, ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப், தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப், உலக சர்பிங் லீக், ஸ்குவாஷ் உலகக் கோப்பை, கேலோ இந்தியா என பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளை தமிழகத்தில் நடத்தியிருக்கிறோம். 

சர்வதேச அரங்கில் இந்திய விளையாட்டுத்துறையின் முகமாக தமிழகம் மாறி வருகிறது. விளையாட்டுத் துறையில் இத்தனை ஆக்கப்பூர்வமாக செயல்படும் தமிழகத்திற்கு வெறும் ரூ.20 கோடியை மட்டும் ஒதுக்கியிருப்பதை  நம் மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.  

இது தமிழக விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி.  தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டும் பாசிச பா.ஜ.க.வின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். வாக்களிக்காத மாநிலங்களுக்கு எதிரான மனநிலையை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து