முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் தமிழ்நாடு இல்ல புதிய கட்டிடங்கள் : முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2024      தமிழகம்
CM-1 2024 07 26

Source: provided

சென்னை :  டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ரூ. 257 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இந்த கட்டிட பணிகளுக்கு தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

அரசாங்க பணிகளுக்காக தமிழகத்தில் இருந்து டெல்லி செல்லும் முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் தங்குவதற்கும், ஆலோசனை கூட்டங்கள் நடத்துவதற்கும் தமிழ்நாடு இல்லம் அவசியமாக இருக்கிறது. 

டெல்லியில் ஏற்கெனவே இரண்டு தமிழ்நாடு இல்லங்கள் இருந்தாலும், அவை 50 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிடங்களாக இருக்கின்றன. எனவே நவீன வசதிகளுடன் அதே இடத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என கடந்த ஆண்டு முதல்வர் அறிவித்து இருந்தார். 

இந்த நிலையில்,  டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. ரூ. 257 கோடி மதிப்பில் கட்டப்பட இருக்கும் கட்டிட பணிகளுக்கு தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, துரைமுருகன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து