முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் நடைபெறவுள்ள ‘க்வாட்’ உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் ஜோ பைடன்

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2024      உலகம்
Joe-Biden 2023-11-14

Source: provided

வாஷிங்டன் : இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ‘க்வாட்’ நாடுகளின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.

இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்துக்கு பதிலடியாக, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘க்வாட்’ அமைப்பை ஏற்படுத்தின. இந்தக் கூட்டமைப்பின் உச்சி மாநாடு கடந்த ஆண்டு மே மாதம் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில் நடைபெற்றது.

இந்த நிலையில், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள குவாட் நாடுகளின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்களுடான சந்திப்பின் போது தேசிய பாதுகாப்பு தகவல் தொடர்பு ஆலோசகர் ஜான் கிர்பி தெரிவித்ததாவது:

வரும் நவம்பா் 5-ஆம் தேதி அமெரிக்க அதிபா் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிபா் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட இருந்த நிலையில், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதயைடுத்து அதிபர் தேர்தலில் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு அதிபர் வேட்பாளர்களிடையே கடும் போட்டிகள் நிலவும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் இந்த ஆண்டு ‘க்வாட்’ உச்சி மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது. இதில் பங்கேற்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டின் ‘க்வாட்’ உச்சி மாநாட்டை பைடன் நடத்தினார். அதன் பின்னர் ‘க்வாட்’ கூட்டமைப்பின் தலைவர்கள் சுழற்சி அடிப்படையில் வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து