முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், வாக்கெடுப்புக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2024      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் வாக்கெடுப்புக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இங்கு மேயராக தி.மு.க.வைச்சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் உள்ளார். இவருக்கு எதிராக எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பல்வேறு புகார்களை கூறி வந்த நிலையில், தி.மு.க. கவுன்சிலர்களும் மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இந்நிலையில், மேயர் தனது பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி 33 கவுன்சிலர்கள் மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகனிடம் நம்பிக்கை இல்லா தீர்மான மனு அளித்தனர்.

இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான மாநகராட்சி கூட்டம் வரும் 29-ம் தேதி நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்தார். இதை எதிர்த்து அ.தி.மு.க. கவுன்சிலர் சிந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், மாநகராட்சி கூட்டத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க மேயருக்கு உத்தரவிட வேண்டும். விவாத கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த மாநகராட்சி ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன்பு நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம், “மேயர் மகாலட்சுமியின் கணவர் யுவராஜ் பொதுமக்களை மிரட்டி பணம் வசூலிக்கிறார். காஞ்சிபுரத்தில் சாலை, குடிநீர் மற்றும் சாக்கடை பிரச்சினைகளை சரி செய்யக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அனைத்து கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் மேயருக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். ஆனால் மாநகராட்சி ஆணையர் மேயருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று கூறினார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மேயருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொத்தாம் பொதுவாக இருக்கிறது. பணம் வசூலித்ததாக கூறும் நிலையில், பாதிக்கப்பட்ட நபரின் புகார் இல்லை. எனவே, மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் வாக்கெடுப்புக்காக ஜூலை 29-ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, மனுவை முடித்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து