முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தா வெளிநடப்பு விவகாரம்: எதிர்க்கட்சிகள் கருத்துகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சனிக்கிழமை, 27 ஜூலை 2024      இந்தியா
CM 2024-05-31

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிடி ஆயோக் கூட்டத்திலிருந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். 5 நிமிடங்கள் கூட என்னை பேச அனுமதிக்கவில்லை என்றார். நிடி ஆயோக் கூட்டத்தில் ஒரு முதல்வரை இப்படித்தான் நடத்துவதா? என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் அமைப்பின் 9 வது கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜ., மற்றும் அக்கட்சி கூட்டணி ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் 8 பேர் புறக்கணித்தனர். மம்தா பானர்ஜி மட்டும் கலந்து கொண்டார். முன்னதாக அவர், கூட்டத்தில் தன்னை பேச அனுமதிக்கவில்லை எனில் கூட்டத்தை புறக்கணிப்பேன் எனக்கூறியிருந்தார். அதன்படி, நேற்று டெல்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டம் கூடியது. சிறிது நேரத்தில் அவர் வெளிநடப்பு செய்தார்.

நிருபர்களிடம் மம்தா கூறியதாவது: கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தேன். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 20 நிமிடங்கள் பேச அனுமதி வழங்கப்பட்டது. அசாம், கோவா, சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் 10- 12 நிமிடங்கள் பேசினர். ஆனால், எனக்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டது. இது அநியாயம். எதிர்க்கட்சிகள் தரப்பில் நான் மட்டுமே பங்கேற்றேன். கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கூட்டத்தில் பங்கேற்றேன். ஆனால் நான் பேச அனுமதிக்கப்படவில்லை.

நான் பேச துவங்கிய 5 நிமிடங்களில் எனது மைக் அணைக்கப்பட்டது. நான் பேசுவதை நிறுத்தியது ஏன்? ஏன் இந்த பாகுபாடு கட்டப்படுகிறது எனக்கேட்டேன். இந்த கூட்டத்தில் நான் பங்கேற்றதற்கு நீங்கள் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். என்னை பேச அனுமதிக்காதது மேற்கு வங்கத்திற்கு மட்டும் அவமானம் அல்ல. பிராந்திய கட்சிகளுக்கும் அவமானம். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

நிடி ஆயோக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வரை பேச அனுமதிக்காதது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிதி ஆயோக் கூட்டத்தில் ஒரு முதல்வரை இப்படித்தான் நடத்துவதா?. இதுதான் கூட்டாட்சியா?. எதிர்க்கட்சிகள் நமது ஜனாநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பா.ஜ., அரசு புரிந்து கொள்ள வேண்டும். கூட்டாட்சியில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு மரியாதை அளிக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சிகளை எதிரியாக நினைத்து அடக்கி வைக்க முயற்சி செய்கின்றனர். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து