முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 36 பேர் உயிரிழப்பு : மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் அறிவிப்பு

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024      இந்தியா
Uttarakhand 2024-11-04

Source: provided

டேராடூன் : உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் பலியானார்கள். விபத்தில்  உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன. 

உத்தரகாண்ட் மாநிலம் கர்வால் மாவட்டத்தில் இருந்து குமான் மாவட்டத்திற்கு நேற்று காலை பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40 பேர் பயணித்தனர்.அல்மொரா மாவட்டம் மர்சுலா கிராமத்தில் மலைப்பாங்கான பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்த 36 பேர் குடும்பத்தினருக்கு 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உறவுகளை இழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து