முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறைந்தது தங்கம் விலை

திங்கட்கிழமை, 29 ஜூலை 2024      வர்த்தகம்
Gold 2024-04-06

சென்னை, சென்னையில் நேற்று (ஜூலை 29) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் தங்கம், 51,320 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் 6,415 ரூபாய்க்கு விற்பனையானது.

மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலையானது கிடு, கிடுவென குறைந்தது. திடீரென, கடந்த ஜூலை 27ம் தேதி தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,465க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.51,720க்கு விற்பனையானது. இந்நிலையில், நேற்று (ஜூலை 29) மீண்டும் தங்கத்தின் விலை குறைந்தது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து, 6,415 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரன் 51,320 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து, ரூ.89.50க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து