முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள நிலச்சரிவில் சிக்கி பலர் பலி: ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2024      இந்தியா
Wayanad-2024-07-30

திருவனந்தபுரம், கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவரும் காங்., எம்.பி.,யுமான ராகுல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி திரெளபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், மீட்புப் பணிகள் வெற்றியடையவும் பிரார்த்திக்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், 'வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து அறிந்து மிக கவலையுற்றேன். அன்பான ஒவ்வொருவரையும் இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறேன். கேரளாவுக்கு வேண்டிய உதவிகளை மத்திய அரசு செய்யும். மாநில முதல்வருடன் போனில் தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்டறிந்தேன்' எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல் வெளியிட்ட பதிவில், நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் மக்கள் நிலை குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டு அறிந்தேன். உயிரிழப்பு பெரும் கவலையை தருகிறது. தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும், காயமுற்றவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

அமித்ஷா வெளியிட்ட பதிவில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு வருத்தமளிக்கிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் போர்க்கால அடிப்படையில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மீட்பு பணியை தீவிரப்படுத்த இரண்டாவது குழு ஏற்கனவே புறப்பட்டு சென்றுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில்  வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் அதன் விளைவாக விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனது பற்றி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அப்பகுதியில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாக கூறுகின்றனர். மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று அனைவரையும் காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் தேவைப்படும் அனைத்துவித உதவிகளையும் சகோதர மாநிலமான கேரளாவிற்கு வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்,  நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்ததாக வரும் செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மேலும், 400க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக செய்திகள் வரும் நிலையில், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டுமென கேரள அரசையும், மீட்புப் பணிகளில் கேரள மாநில அரசுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்துக்கொடுக்குமாறு மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன். நம் அண்டை மாநில சகோதரர்களுக்கு இந்த துயர்மிகு நேரத்தில் உறுதுணையாக இருக்குமாறு திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து