முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூணாறு மலைப்பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவு

செவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2024      இந்தியா
munnar

Source: provided

மூணாறு: பருவமழைக் காலங்களில் சொல்லொணாத் துயரங்களை சந்தித்து வரும் கேரள மாநிலத்தில், இந்த ஆண்டும் கனமழையால், கடுமையான நிலச்சரிவு நேரிட்டதில் 100-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாறு மலைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலைகளில் பெரிய பெரிய பாறைகள் விழுந்திருப்பதால், மூணாறு பகுதிக்கு சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு பகுதிக்குச் செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாறு பகுதி, மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாதிப்பு நிலவரம் எதுவும் வெளியாகவில்லை. கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை, மூணாறு - மறையூர் உள்ளூர் சாலை மற்றும் மூணாறு - பள்ளிவாசல் சாலைகளில் நிலச்சரிவு நேரட்டிருப்பதாகத் தகவல்கள்தெரிவிக்கின்றன.

மூணாறு மற்றும் மாங்குலம் பகுதிகளிலும் நிலச்சரிவு நேரிட்டிருப்பதாகவும், இடுக்கி மாவட்டத்தின் ஆதிவாசிகள் வாழும் பகுதிகள் மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டிருப்பதால் அங்கு என்ன பாதிப்பு நேரிட்டிருக்கிறது என்று தெரியாமல் மீட்புக் குழு கவலை அடைந்துள்ளது.

தேவிகுளம் துணை ஆட்சியர் வி.எம். ஜெயகிருஷ்ணன் கூறுகையில், கனமழையால் நேரிட்ட நிலச்சரிவில் ஏராளமான சேறும் பாறைகளும் சாலைகளில் விழுந்துள்ளன. சாலைகளில் விழுந்துள்ள மணல் மற்றும் பாறைகளை அகற்றும் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது என்றார். கடந்த 24 மணி நேரத்தில் மூணாறு பகுதியில் 207 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து