முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலிறுதியில் இந்திய ஹாக்கி அணி

செவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2024      விளையாட்டு
30-Ram-59-1

Source: provided

பாரீஸ் ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி அயர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. அயர்லாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய ஹாக்கி அணி வெற்றிபெற்றது. மொத்தமாக மூன்று லீக் போட்டிகளில் ஆடிய இந்திய அணி இரண்டில் வெற்றியும், அர்ஜென்டீனா அணிக்கு எதிரானப் போட்டியில் டிரா செய்திருந்தது. மூன்று போட்டிகளின் முடிவில் 7 புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

வாள்வீச்சு போட்டியில் அசத்தல்

பாரீஸ் ஒலிம்பிக்ஸில் எகிப்திய வாள்வீச்சு வீராங்கனையான நடா ஹஃபீஸ், தான் 7 மாத கர்ப்பிணியாக வாள்வீச்சுப் போட்டியில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார். எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவைச் சேர்ந்த 26 வயதான நடா ஹஃபீஸ், முன்னாள் தேசிய கல்லூரி தடகள சங்கத்தின் சாம்பியனான அமெரிக்காவின் எலிசபெத் டார்டகோவ்ஸ்கியை தோற்கடித்து அவருக்கு அதிர்ச்சியளித்தார். ஆனால், அடுத்த சுற்றில் தென் கொரியாவின் ஜியோன் ஹயோங்கிடம் தோல்வியைத் தழுவினார்.

இதுகுறித்து எகிப்து நாட்டைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனையான நடா ஹஃபீஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “ போட்டிக் களத்தில் இரண்டு பேர் இருப்பதாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், உண்மையில் இங்கிருப்பது மூன்று பேர்!. ஆம்..நான், என்னுடைய போட்டியாளர் மற்றும் இன்னும் நம் உலகிற்கு வராத என்னுடைய குழந்தை! என் குழந்தையும் நானும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் உள்ள சவால்களில் சம அளவிலான பங்கைக் கொண்டுள்ளோம். கர்ப்ப காலம் ரோலர்கோஸ்டர் போல கடினமானது. ஆனால், வாழ்க்கை, விளையாட்டுகளின் சமநிலையை பராமரிக்க போராடுவது கடினமானது என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து