முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்தவொரு கருத்தையும் அறிவியல் ரீதியாக பகுத்தறிந்து சிந்திக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்து

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2024      தமிழகம்
Anbil 1

சென்னை, எந்தவொரு கருத்தையும் அறிவியல் ரீதியாக பகுத்தறிந்து சிந்திக்க வேண்டும்  என்பதை நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் மூன்று நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆன்மிகச் சொற்பொழிவாளர் மகா விஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் புறம்பாகப் பேசியதாக கூறப்படுகிறது. 

மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம் தான் காரணம் என்று பேசியுள்ளார். அரசு பள்ளிக்கூடங்களில் ஆன்மிகத்திற்கு இடமில்லை என்று கேள்வி எழுப்பிய ஆசிரியருக்கு ஆன்மிகச் சொற்பொழிவாளர் மகா விஷ்ணு ஆன்மிகம், மறுபறவி, பாவ,புண்ணியம் ஆகியவை பற்றி பேசினார். 

அதே போல் அரசு பள்ளிக்கூடங்களில் ஆன்மீகம் பேசக் கூடாது என்று எந்த சட்டம் கூறுகிறது என்றும் கேள்வி எழுப்பினார். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியை விட ஆசிரியர்கள் பெரியவர்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ  ஊடகங்களில் வெளியான நிலையில்,  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மூடநம்பிக்கைகள் குறித்து பேசியவரை, அதே மேடையில் வைத்து கேள்வி கேட்ட ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்தார். 

மேலும், என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்திற்கு வந்து, என் ஆசிரியர் சங்கரை அவமானப்படுத்தி பேசிய மகாவிஷ்ணுவை சும்மாக விடமாட்டேன்  என்றும் கூறினார். 

இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

பள்ளி வளாகம் என்பது ஆசிரியர்களுக்கானது. நமது மாணவச் செல்வங்களுக்கானது. நமது பள்ளிக்குள் நுழைந்து மாணவர்களிடம் உரையாடுபவர்களின் பின்புலத்தை ஆராய வேண்டிய கடமை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு உண்டு.

எந்தவொரு கருத்தையும் அறிவியல் ரீதியாக பகுத்தறிந்து சிந்திக்க வேண்டும்  என்பதை நாம் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். கல்வியால் உலகை வெல்வோம். அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம். கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய மிகப்பெரிய ஆயுதம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து