முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை கடைசி டெஸ்ட் போட்டி: 2-வது இன்னிங்சில் இந்தியா ஆதிக்கம் : நியூசி. 9 விக்கெட்களை இழந்து திணறல்

சனிக்கிழமை, 2 நவம்பர் 2024      விளையாட்டு
India 2024-11-02

Source: provided

மும்பை : இந்தியாவுக்கு எதிரான 2-வது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி பெரிய தடுமாற்றத்தைச் சந்தித்துள்ளது. அந்த அணி 171 ரன்களுக்கு  9 விக்கெட்களை இழந்து 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

மிட்சல் 82 ரன்கள்... 

மும்பை வான்கடே மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இறுதி டெஸ்ட்டில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, பேட்டிங்கை தோ்வு செய்தது. மிக விரைவாகவே விக்கெட்கள் விழ முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அந்த அனி வீரர், டேரில் மிட்சல் 82 ரன்கள் விளாசினார்.

4 பவுண்டரிகளுடன்... 

இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, முதல் நாளான வெள்ளிக்கிழமை முடிவில் 19 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 86 ரன்கள் சோ்த்தது. டாப் ஆா்டா் பேட்டா்களில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 பவுண்டரிகளுடன் 30, கேப்டன் ரோஹித் சா்மா 3 பவுண்டரிகளுடன் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ரிஷப் பந்த் அவுட்... 

தொடர்ந்து, நேற்று 2-ம் நாள் ஆட்டத்தை துவங்கிய சுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் இணை நியூசி. பந்துவீச்சை திணறடித்தனர். 5-வது விக்கெட்டாக 60 ரன்களில் ரிஷப் பந்த் அவுட் ஆனார். நிதானமாக விளையாடிய சுப்மன் கில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். பின், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்ஃபராஸ் கான் டக் அவுட் ஆக, அடுத்தடுத்து களத்திற்கு வந்த வீரர்களும் தட்டுத்தடுமாறி அவுட் ஆகினர்.

லாதம் டக் அவுட்....

அதிகபட்சமாக, நியூசிலாந்து பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதனால், இந்திய அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. மேலும், நியூசி. அணியைவிட 28 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, தன் இரண்டாவது இன்னிங்ஸை நியூசி. அணி துவங்கியது. ஆகாஷ் தீப் பந்துவீச்சில் டாம் லாதம் டக் அவுட் ஆக அடுத்ததாக டெவன் கான்வே, வில் யங் இணை பொறுப்பாக ஆடினர். ஆனால், கான்வே விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் எடுத்ததும் அடுத்தடுத்து களத்திற்குள் வந்த நியூசி. வீரர்கள் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோரின் சுழற்பந்து வீச்சால் விரைவாக விக்கெட்களைக் கொடுத்தனர்.

143 ரன்கள் முன்னிலை...

நிதானமான ஆட்டத்தை ஆடிய வில் யங் 8-வது விக்கெட்டாக 51 ரன்களில் அவுட் ஆக, இறுதியில் இரண்டாவது நாளில் 43.3 ஓவர்கள் முடிவில் நியூசி. 171 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து இந்திய அணிக்கு 143 ரன்களை முன்னிலையாக (lead) வைத்திருக்கிறது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து