எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா : கொல்கத்தா பெண் டாக்டர் விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று ஜூனியர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில், ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. இதனால் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு பின்னர் அடுத்தடுத்து பல்வேறு விசயங்கள் வெளிவந்தன. சந்தீப் கோஷ் தலைமையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்தது. இதற்காக அவருடைய இல்லம் உள்ளிட்ட பல இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் நீதி கோரி, டாக்டர்களில் ஒரு சிலர் உண்ணாவிரத போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டனர். தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் சிலருக்கு உடல்நல பாதிப்பும் ஏற்பட்டது. தீபாவளி கொண்டாட்டங்கள் ஒருபோது நடந்தபோதும், பெண் டாக்டருக்கு ஆதரவான பொதுமக்களின் அமைதி போராட்டமும் தொடர்ந்தது.
இந்நிலையில், ஜூனியர் டாக்டரான ராஜ்தீப் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலையுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் சி.பி.ஐ. கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் அனைவருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.குற்றப்பத்திரிகையில், தொடக்கத்தில் குறிப்பிடப்படாமல் விடப்பட்ட பெயர்கள் உள்ளடக்கிய ஒரு விரிவான குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
வருகிற 9-ம் தேதியுடன் இந்த சம்பவம் நடந்து 90 நாட்கள் ஆகவுள்ள சூழலில், நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும். அன்றைய தினம், இந்த வழக்கில் இதுவரை நடந்த மிகப்பெரிய விசயங்கள் எல்லாவற்றையும் காட்சிப்படுத்துவோம் என்றும் அவர் உறுதியுடன் கூறியுள்ளார். கடந்த 22-ந்தேதி, முதல்-மந்திரி மம்தா பானர்ஜியுடன் நடந்த 2 மணிநேர சந்திப்புக்கு பின்னர் ஜூனியர் டாக்டர்கள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், போராட்டம் இத்துடன் முடிந்து விடாது என்றும், நீதி வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் ஜூனியர் டாக்டர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 days ago |
-
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
01 Nov 2024மேட்டூர் : மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று (நவ. 1) காலை 108. 22 அடியில் இருந்து 107.88 அடியாக குறைந்துள்ளது.
-
வரும் 5, 6-ம் தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை சுற்றுப்பயணம் : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
01 Nov 2024கோவை : வரும் 5, 6-ம் தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
5-ம் தேதி வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகிறது: தமிழகத்தில் தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
01 Nov 2024சென்னை : 5-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை மையம், வடகிழக்க
-
மீண்டும் மும்பை அணியில்... ரோகித் சர்மா விளக்கம்
01 Nov 2024மும்பை : அடுத்த ஐ.பி.எல். தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மீண்டும் இடம் பிடித்துள்ளார். இதுகுறித்து தற்போது அவர் விளக்கமளித்துள்ளார்.
-
தீபாவளிக்கு வெளியூர் சென்றவர்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்ப தமிழ்நாடு முழுவதும் 12,846 பஸ்கள் இயக்கம் : இன்று முதல் 3 நாட்கள் இயக்க ஏற்பாடு
01 Nov 2024சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் சென்னைக்கு திரும்ப வசதியாக 12,846 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்
-
குற்றால அருவிகளில் குளிக்க தடை
01 Nov 2024தென்காசி : குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு
01 Nov 2024தூத்துக்குடி : சூரசம்ஹாரத்தை முன்னிட்டு 6-ம் தேதி திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு
01 Nov 2024சென்னை, வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கும் நிலையில், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 61 ரூபாய் 50 காசுகள் அதிகரித்து
-
முடியாத வாக்குறுதிகளை அளிக்கிறது: காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி தாக்கு
01 Nov 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சி நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை மக்களுக்கு அளிக்கிறது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
-
குஜராத்தின் கச் பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி
01 Nov 2024கச்/தேஜ்பூர் : நாடு முழுவதும் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில் பிரதமர் மோடி, குஜராத்தின் கச்சிலும், பாதுகாப்புத்துறை அ
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் 9.7 கோடி வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் தகவல்
01 Nov 2024மும்பை : மகாராஷ்டிரத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9.7 கோடி என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிப்பிக்கப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் தெரிவிக்க
-
பும்ரா குறித்து பி.சி.சி.ஐ. விளக்கம்
01 Nov 2024இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மும்பையில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
-
பெங்களூரு அணிக்காக ஐ.பி.எல். கோப்பையை வெல்வதே இலக்கு : விராட் கோலி பேட்டி
01 Nov 2024பெங்களூரு : அடுத்த ஐ.பி.எல். தொடருக்கான பெங்களூரு அணியில் விராட் கோலி முதல் வீரராக தக்க வைக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூரு அணிக்காக ஒரு ஐ.பி.எல்.
-
கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம்: சிவகாசியில் மட்டும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனை
01 Nov 2024சிவகாசி, கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு விற்பனை அதிகம். சிவகாசியில் மட்டும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-11-2024.
02 Nov 2024 -
மும்பை 3-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் இந்தியா தடுமாற்றம் : நியூசி. 235 ரன்களில் ஆல் அவுட்
01 Nov 2024மும்பை : 3-வது டெஸ்ட்: ஜடேஜா அபார பந்துவீச்சு..
-
ஒரகடத்தில் ரூ.2,858 கோடியில் உலகளாவிய மையம்: சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு செயிண்ட் கோபைன் விண்ணப்பம்
02 Nov 2024சென்னை, ஒரகடம் பகுதியில் ரூ.2,858 கோடி மதிப்பில் உலகளாவிய மையம் அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு செயிண்ட் கோபைன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
-
யாகசாலை பூஜையுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது
02 Nov 2024தூத்துக்குடி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று காலை தொடங்கியது.
-
ரத்த உறவை விட லட்சிய உறவு மேல்: கொள்கை என்று வந்துவிட்டால் அண்ணன் என்ன, தம்பி என்ன..? விஜய் மீது சீமான் கடும் விமர்சனம்
02 Nov 2024சென்னை, தம்பி என்ற உறவு வேறு. கொள்கையில் முரண் என்பது வேறு. என்னைப் பெற்ற தாய் தந்தையராகவே இருந்தாலும், எங்களுடைய கொள்கைக்கு எதிராக இருந்தால், எதிரி எதிரிதான்.
-
'அமரன்' படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
02 Nov 2024சென்னை : 'அமரன்' படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
ஸ்பெய்னில் இயல்பு நிலை திரும்பாததால் மக்கள் அவதி
02 Nov 2024மாட்ரிட், ஸ்பெயின் நாட்டில் கனமழை - வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது.
-
மத்திய கிழக்கில் போர் பதற்றம்: கூடுதல் ஆயுதங்களை அனுப்பிய அமெரிக்கா
02 Nov 2024வாஷிங்டன், இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதல் ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
-
மேற்கு வங்காளத்தில் பெண்களுக்கான ரெயில் பெட்டியில் பயணம் செய்ததாக 1,400 பேர் கைது
02 Nov 2024கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் கடந்த அக்டோபரில் கிழக்கு ரெயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட ரெயில்களின் பெண்களுக்கான பெட்டியில் பயணித்த ஆண் பயணிகள் 1,400-க்கும் மேற்பட்டோர்
-
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: லெபனானில் 52 பேர் பலி
02 Nov 2024பெய்ரூட் : வடக்கு லெபனானின் விவசாய கிராமங்களில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர் என்று லெபனான் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்த
-
ம.பி. பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் கடந்த 3 நாளில் 10 யானைகள் பலி: வனத்துறையினர் தீவிர விசாரணை
02 Nov 2024போபால் : மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் 13 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த அக்டோபர் 29ம் தேதி முதல் அடுத்தடுத்து 10 யானைகள் உய