முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2024      தமிழகம்
eps

Source: provided

சென்னை : தி.மு.க. ஆட்சியில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பெண்கள் நடமாடவே முடியாத அளவுக்கு பாதுகாப்பு கொஞ்சமும் இல்லாத நிலை உள்ளது. தி.மு.க., ஆட்சியில் குற்றவாளிகள் துணிந்துவிட்டனரோ?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது., தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் நடந்து சென்ற பெண் ஒருவர் லிப்ட் கொடுப்பது போல் பேசி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தி.மு.க., ஆட்சியில் பெண்கள் நடமாடவே முடியாத அளவுக்கு பாதுகாப்பு கொஞ்சமும் இல்லாத நிலை உள்ளது.

இதே தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாட்டில் கடந்த மாதம் சாலையில் நடந்துகொண்டிருந்த பெண் ஒருவர் 6 பேர் கொண்ட மர்மகும்பலால் பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டார். புகார் அளிக்க சென்றால், போலீசார் தன்னை அலைக்கழித்ததாக ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். பாலியல் வழக்குகளை இவ்வளவு அலட்சியமாக கையாளும் அளவிற்கு நிர்வாகத்தை சீர்கெடுத்துள்ள முதல்வருக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

சட்டம் தன்னை ஒன்றும் செய்யாது என்று குற்றவாளிகள் துணிந்துவிட்டனரோ என்று நினைக்கும் அளவிற்கு விடியா திமுக ஆட்சியில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. வன்கொடுமை வழக்குகளின் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். இனி ஒரு நிர்பயா தமிழ்நாட்டில் உருவாகக் கூடாது என்ற நோக்கத்துடன் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து