முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய சாட்டிலைட்டை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய ஈரான்

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2024      உலகம்
Iran 2024-09-15

Source: provided

டெக்ரான் : ஈரான் ஏவிய ராக்கெட் மூலம் புதிய ஆராய்ச்சி சாட்டிலைட் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.  

 துணை ராணுவ புரட்சிப்படையால் தயாரிக்கப்பட்ட கஹீம் 100 என்ற ராக்கெட் மூலம் இந்த சாட்டிலைட் ஆனது ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் மூலம் ஈரான் செயற்கைக்கோளைச் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்துவது இது இரண்டாவது முறையாகும்.  

தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ள சம்ரான் -1  என்ற இந்த சாட்டிலைட் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஈரானின் எலக்ட்ரானிக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மூலம் 60 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டு வருங்காலங்களில் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தும் டெக்னலாஜியின்  ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் தொழில்நுட்பத்தைச் சோதனை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது  

இந்நிலையில்  ஈரான்  சாட்டிலைட்டை ராக்கெட் மூலம் ஏவ பயன்படுத்திய யுக்தியை போர் ஆயுதங்களான பாலிஸ்டிக் ஏவுகணைகளை   ஏவ பயன்படுத்தக்கூடும் என்று  அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. 

பாலஸ்தீன போருக்கு மத்தியில் இந்த தொழில்நுட்பம் மூலம் ஈரானில் இருந்தபடியே இஸ்ரேல் மீது ராக்கெட் மற்றும் டிரோன் தாக்குதல் நடத்த முடியும் என்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து