முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்டில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு: மாவோயிஸ்டு ஆதிக்க பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் : மாநில தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2024      இந்தியா
Election-1 2023-11-06

Source: provided

ராஞ்சி : ஜார்க்கண்டில் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மாவேயிஸ்ட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். 

81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 15 மாவட்டங்களில் உள்ள 43 தொகுதிகளில் 73 பெண்கள் உட்பட 683 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

முதல்கட்ட தேர்தலில் 2 கோடியே 7 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில், மாவேயிஸ்ட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஜார்கண்ட் தலைமை தேர்தல் அதிகாரி கே.ரவிக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

முதல்கட்ட தேர்தலுக்காக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தயாராக இருப்பதாகவும் ஜார்கண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து