முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுக்கூட்டத்தில் பங்கேற்காததால் மகராஷ்டிரா மக்களிடம் மன்னிப்பு கோரிய ராகுல்

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2024      இந்தியா
Rahul 2024-06-10

Source: provided

மும்பை  பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இயலாததால் மகாராஷ்டிர மக்களிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டு செவ்வாய்க்கிழமை காணொலி வெளியிட்டுள்ளார்.

கேரள வயநாடு மக்களவைத் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி, நேற்று மகாராஷ்டிர தேர்தல் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேச திட்டமிட்டிருந்தார். புல்தானா மாவட்டம் சிக்லியிலும், கோண்டியா மாவட்டம் கோபால்தாஸ் அகர்வாலிலும் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள இருந்தார்.

இதற்காக தனி விமானம் மூலம் மும்பை வரும் ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் புல்தனாவுக்கும். கோண்டியாவுக்கும் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பயணம் ரத்தானதாகவும், அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட விடியோவில்,

“நான் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். இன்று சிக்கி வர திட்டமிட்டிருந்தேன். இந்த பயணத்தின்போது விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடிய பின், பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்தேன். ஆனால், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணம் மேற்கொள்ள முடியவில்லை. மகாராஷ்டிர விவசாயிகள் பல பிரச்னைகளை எதிர்கொண்டு வருவது எனக்கு தெரியும். பாஜக அரசு விவசாயிகளுக்கு சரியான விலையை தரவில்லை. ‘இன்டியா’ கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் பிரச்னைக்கு தீர்வு காணும். உடனடியாக உங்கள் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து