முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்ய ரஷ்யர்களுக்கு அதிபர் புடின் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2024      உலகம்
Putin 2024-03-17

Source: provided

மெக்சிகோ : வேலை செய்யும் இடத்தில் மதிய உணவு மற்றும் காபி இடைவெளியின் போது என நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்து குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ரஷ்யர்களுக்கு அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் பரப்பளவில் மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் 1990-ம் ஆண்டுகளில் இருந்தே பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது.  இது ஒருபக்கம் என்றால் போர் உள்ளிட்ட காரணங்களால் அந்நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2 ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன் போரில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 

 ரஷ்யாவில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதால் வரும் காலங்களில் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், ரஷ்ய அதிபர் புடின் அந்த நாட்டு மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

இந்த நிலையில்  ரஷ்யாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் குறித்து புடின் கவலை அடைந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:  

உக்ரைனுடன் நடந்து வரும் போரின் காரணமாக நாட்டின் மக்கள் தொகை குறைந்துள்ளது. இது தேசத்தின் எதிர்காலத்திற்கு பேரழிவு. வேலையில் மிகவும் பிசியாக இருப்பது சரியான காரணம் அல்ல. இனப்பெருக்கத்திற்கு வேலை ஒரு தடையாக இருக்கக்கூடாது. 

வேலை செய்யும் இடத்தில் மதிய உணவு மற்றும் காபி இடைவெளியின் போது என நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.  ரஷ்ய அதிபர் புடின் இவ்வாறு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து