Idhayam Matrimony

3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி: நாட்டின் வலிமையை மேலும் அதிகரிக்கும் என பதிவு

புதன்கிழமை, 15 ஜனவரி 2025      இந்தியா
PM-Modi-2025-1-15

மும்பை, இந்திய கப்பற்படைக்கு மேலும் வலுகூட்டும் வகையில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ். வாக்ஷீர் உள்ளிட்ட 3 போர்க்கப்பல்களை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது நாட்டின் வலிமையை மேலும் அதிகரிக்கும் என அவரு பதிவிட்டுள்ளார்.

ஒரே நேரத்தில், தாக்கி அழிக்கும் திறன்கொண்ட போர்க் கப்பல், ஒரு நீர்மூழ்கிக் கப்பல் போன்றவை ஒன்றாக கப்பற்படையில் இணைக்கப்படுவது இதுவே முதல் முறை. இதில் மேலும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மூன்றுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்று மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி பேசினார்.

நிகழ்ச்சியின்போது, மூன்று முக்கிய போர்க் கப்பல்கள், கப்பற்படையில் அர்ப்பணிக்கப்பட்டதை ஒரு வரலாற்று நிகழ்வு என்று கடற்படை பெருமிதத்துடன் விளக்கியிருக்கிறது. அதாவது, போர்க்கப்பல்கள் உருவாக்கத் திட்டம் 17ஏ-வின்படி தயாரிக்கப்பட்டதில் முன்னணிக் கப்பலாக ஐ.என்.எஸ். நீலகிரி விளங்குகிறது. ஷிவாலிக் வகையைச் சேர்ந்த போர்க் கப்பல்களைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க நவீன தொழில்நுட்பங்கள் ஐ.என்.எஸ். நீலகிரியில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டு, மும்பையில் உள்ள மஸாகன் கப்பல் கட்டும் தளத்தில் இந்தக் கப்பல்கள் தயாரிக்கப்பட்டன. இது மேம்பட்ட கடற்படை வீரர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் தொழில்நுட்பம், கப்பலின் பாதுகாப்பை உறுதி செய்வது, அதேவேளையில், ரகசியமான கண்காணிப்புகளை மேற்கொள்ளும் வகையில் மேம்பட்ட அம்சங்களை உள்ளடக்கியது, இது அடுத்த தலைமுறை உள்நாட்டு போர்க்கப்பல்களையே பிரதிபலிக்கிறது என்று புகழ்ந்துரைத்துள்ளது கப்பற்படை.

இதன் ரகசியத் தன்மையும், ரேடார்களின் வலையில் சிக்காமல் தவிர்க்கும் தன்மையும்தான் இதன் சிறப்பம்சங்கள். இது நவீன விமான இயங்குதள வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எம்எச்-60ஆர் உள்பட பல வகை ஹெலிகாப்டர்களை இந்த போர்க்கப்பலிலிருந்து இயக்க முடியும். ஐ.என்.எஸ். சூரத், போர்க்கப்பல் கட்டும் திட்டம் 15ன் கீழ் உருவாக்கப்பட்ட நான்காவது மற்றும் இறுதிக் கப்பல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று முக்கிய கப்பல்களை கடற்படையில் இணைப்பது, பாதுகாப்பில் உலகளாவிய தலைமையாக இருப்பதற்கான நாட்டின் முயற்சிகளை வலுப்படுத்தும் என்றும், தன்னம்பிக்கையை நோக்கிய வலிமையை அதிகரிக்கும் என்றும் பிரதமர் மோடி எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து