முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல்

புதன்கிழமை, 15 ஜனவரி 2025      இந்தியா
Kejrival-2025-01-15

புதுடெல்லி, புதுடெல்லி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. டெல்லி சட்டசபை தேர்தலுக்காக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இந்நிலையில் புதுடெல்லி சட்டசபை தொகுதியில் நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்புமனுவை நேற்று (புதன்கிழமை) அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்தார். முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்ய தனது குடும்பத்தினர் மற்றும் டெல்லியின் ஆம் ஆத்மி பெண் ஆதரவாளர்கள் மற்றும் சகோதரிகளுடன் அவர் வந்திருந்தார். மேலும் அங்குள்ள அனுமன் கோவில் மற்றும் வால்மீகி கோவிலில் பிரார்த்தனை செய்த பிறகு கெஜ்ரிவால் வேட்புமனுவை தாக்கல் செய்தார். புதுடெல்லி தொகுதியில் போட்டியிடும் கெஜ்ரிவால், இந்த முறை பா.ஜ.க.வின் பர்வேஷ் வர்மா மற்றும் காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் ஆகியோரை எதிர்கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து