முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுபான கொள்கை ஊழல்: கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறைக்கு அனுமதி

புதன்கிழமை, 15 ஜனவரி 2025      இந்தியா
Kejrival 2024-01-05

புதுடெல்லி, ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மீது மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக பணமோசடி வழக்கு தொடர அமலாக்கத்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேட்டில் ரூ.2800 கோடி ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். சி.பி.ஐ., அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

கடந்த நவம்பர் 6-ம்தேதி சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி அரசின் முன் அனுமதி பெறாமல் அரசு ஊழியர் ஒருவரை பணமோசடி வழக்கின் கீழ் கைது செய்ய முடியாது என்று தெரிவித்து இருந்தது. இந்த தீர்ப்பின்படி கெஜ்ரிவால், மீது வழக்கு தொடர அனுமதி கோரி, துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது. அவரும் அதற்கு ஒப்புதல் அளித்து இருந்தார்.

இந்த நிலையில் மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மீது பணமோசடி வழக்கு தொடர அமலாக்கத்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து