முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடிக்கு நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2024      தமிழகம்
Rajini-Kamal 2023-11-22

Source: provided

சென்னை : பிரதமர் மோடிக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

குஜராத் முதல்வராக நான்கு முறையும், நாட்டின் பிரதமராக 3-வது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி நேற்று தனது 74-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனையொட்டி அரசியல் கட்சித்தலைவர்கள், மாநில முதல்வர்கள், மாநில கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

நமது மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திரமோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து