முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு: பட்டதாரிகள் அக்.16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: சி.பி.எஸ்.இ.

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024      தமிழகம்
CBSE 2023 07-14

Source: provided

சென்னை : சிடெட் எனும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு பட்டதாரிகள் அக்டோபர் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் பணியில் சேருவதற்கு சிடெட் என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இரு தாள்கள் கொண்ட இந்த தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (சி.பி.எஸ்.இ.) ஆண்டுதோறும் ஜூலை, டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

இடைநிலை ஆசிரியர் பணிக்கு முதல் தாள் தேர்வும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 2-ம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது. சிடெட் தேர்வு மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தமிழ் உட்பட 20 மொழிகளில் நேரடிமுறையில் நடைபெறும். 

அதன்படி நடப்பாண்டு டிசம்பர் பருவத்துக்கான சிடெட் தேர்வு டிசம்பர் 1-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான அறிவிப்பாணையை சி.பி.எஸ்.இ. தற்போது வெளியிட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் https://ctet.nic.in/ என்ற இணையதளம் மூலமாக அக்டோபர் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பக் கட்டணம், தேர்வு வழிமுறைகள், பாடத்திட்டம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று சி.பி.எஸ்.இ. நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து