முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் இலையுதிர் கால திருவிழா: மூன் கேக் சாப்பிட்டு மக்கள் மகிழ்ச்சி

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024      உலகம்
China 2024-03-18

பெய்ஜிங், சீனாவில் இலையுதிர் கால திருவிழாவையொட்டி மூன் கேக் சாப்பிட்டு மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

 புத்தாண்டுக்கு நிகராக சீனர்கள் கொண்டாடும் விழா இலையுதிர் காலத் திருவிழாவாகும்.  சீன நாட்காட்டியின் 8-வது மாதத்தின் 15-வது நாளில் இலையுதிர்க் காலத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்நாளில் சுற்றத்தாருடன் சேர்ந்து நிலவை பார்த்து மூன் கேக் சாப்பிடுவது முக்கிய நிகழ்வாகும். அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழாவை சீனர்கள் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

சீனாவில் உள்ள யூ பூங்கா பழமையுடன் புதுமை கலந்து மின்னுகிறது. ராட்சத அளவிலான நவீன விளக்குகள் பூங்காவை அலங்கரிக்கின்றன. அதே போல ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளிலும் குடும்பத்தினருடன் இணைந்து விளக்குகளை மிதக்கவிட்டு மகிழ்கின்றனர். ஒரு பக்கம் ஆடல், பாடலுடன் இசை நிகழ்ச்சிகளும் களைகட்டி காணப்படுகிறது. 

முன் ஒரு காலத்தில் சீனாவில் ஹோயி சேன்ஜ் என்ற காதல் தம்பதி வாழ்ந்தனர். சிறந்த வில்லாளரான ஹோயி மக்களை வதைத்த ஒன்பது சூரியன்களை வில்லால் வீழ்த்தியதற்காக அமிர்தத்தை பரிசாக பெற்றாராம். இருவரும் இணை பிரியாமல் இருக்க எண்ணி ஒருவர் மட்டுமே பருகும் அளவும் இருந்த அமிர்தத்தை வீட்டிலேயே வைத்துள்ளனர். ஆனால் ஹோயியின் மாணவர் ஒருவர் இதை திருட வர மனைவி அமிர்தத்தை பருகி நிலவுக்கு சென்று விட்டாராம்.

நிலவை பார்த்தபடி ஒவ்வொரு நாளும் மனைவியை நினைத்து மூன் கேக்குகள் செய்தாராம் ஹோயி இப்புராண கதையை நினைவூட்டியே இவ்விழா கொண்டாடப்படுகிறது.  

இதை நினைவூட்டும் விதமாக சாங்கிங் நகரில் உள்ள ஏரியில் 300 மீட்டர் அளவுக்கு விளக்குகளை ஒளிரவைத்து அதன் நடுவே நிலவு போன்ற விளக்கை வைத்துள்ளனர். சொந்தங்களுடன் நிலவை பார்த்தபடி மூன் கேக்குகள் சாப்பிட்டு மக்கள் மகிழ்ந்தனர்.  இலையுதிர்கால திருவிழாவை நேரில் கண்டு களிப்பதற்காக சுற்றுலா பயணிகளும் குவிந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து