எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருமலை : திருப்பதி லட்டுகளின் புனிதம் மீட்டெடுக்கப்பட்டு விட்டதாக திருப்பதி தேவஸ்தானம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
திருப்பதி லட்டு பிரசாதம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஆந்திர அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. இதனிடையே நெய்யில் மாட்டுக் கொழுப்பு இருந்தது உண்மைதான் என்று தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
இந்நிலையில் திருப்பதி லட்டுகளின் புனிதம் மீட்டெடுக்கப்பட்டு விட்டதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திருப்பதி லட்டுகளின் தெய்வீகத்தன்மையும் தூய்மையும் இப்போது கறைபடாமல் உள்ளது. திருப்பதி லட்டுகளின் புனிதம் மீட்டெடுக்கப்பட்டு, தற்போது களங்கமின்றி உள்ளது. அனைத்து பக்தர்களின் திருப்திக்காக லட்டு பிரசாதத்தின் புனிதத்தை பாதுகாக்க தேவஸ்தானம் உறுதிபூண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் கூறுகையில்,
லட்டு மாதிரிகளில் விலங்கு கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்தது. கலப்படம் செய்யப்பட்ட நெய்யை வழங்கிய ஒப்பந்ததாரரை கருப்பு பட்டியலில் சேர்க்கும் பணியில் வாரியம் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நெய்யில் காய்கறி கொழுப்பும், விலங்கு கொழுப்பும் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்தது. விலங்கு கொழுப்பு (பன்றி கொழுப்பு), பாமாயில், மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் திராட்சை விதை, ஆளிவிதை உட்பட மீன் எண்ணெய் ஆகியவையும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
சோதனைக்கு உட்பட்ட நெய் மாதிரியில் இதெல்லாம் ஒரு கலவையாக இருந்ததிருக்கிறது. தூய பால் கொழுப்பின் அளவு 95.68 முதல் 104.32 வரை இருக்க வேண்டும். ஆனால், எங்களின் அனைத்து நெய் மாதிரிகளிலும் சுமார் 20 அளவே இருக்கின்றன.
அதாவது வழங்கப்படும் நெய்யில் அதிக கலப்படம் உள்ளது. கலப்படம் செய்தவர்களை தடைப்பட்டியலில் சேர்க்கும் நடைமுறையை நாங்கள் தொடங்கி உள்ளோம். சப்ளையர் மீது அபராதம் விதித்துள்ளோம். நெய் சப்ளைகளை மேம்படுத்தவும், எங்கள் உள் அமைப்பை வலுப்படுத்தவும் நாங்கள் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளோம்.
எங்கள் சொந்த ஆய்வகத்தை அமைக்க உள்ளோம். இந்த பிரச்சனை எதிர்காலத்தில் தீர்க்கப்படும்.திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியாக நான் பொறுப்பேற்றதும், வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு பிரசாதமாக வழங்கப்படும் நெய் மற்றும் மிகவும் புனிதமானதாக கருதப்படும் லட்டுவின் தரம் குறித்து முதல்வர் கவலை தெரிவித்தார்.
தரத்தில் பாதிப்பு உண்டாக்குவது புனிதமற்ற தன்மையை செய்வது போன்று. தூய்மையான பசும்பால் நெய் கிடைப்பது உள்ளிட்ட இந்த கோவிலின் புனிதத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான வேலைகளை ஆரம்பித்தோம்.
நெய்யில் கலப்படத்தை சோதிக்க எங்களிடம் ஆய்வுக்கூடம் இல்லை என்பது தெரிய வந்தது. வெளியில் உள்ள ஆய்வகங்களிலும் நெய்யின் தரத்தை சரிபார்க்க எந்த சிஸ்டமும் இல்லை. நெய் செய்ய டெண்டர் எடுத்தவர்கள் குறிப்பிடும் விலை சாத்தியமற்றதாக உள்ளது.
சுத்தமான பசு நெய்யை இவ்வளவு குறைந்த விலையில் கொடுக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு குறைவாக இருந்தது. அனைத்து சப்ளையர்களையும் எச்சரித்தோம். சப்ளை செய்யப்பட்ட நெய் ஆய்வக சோதனையில் தேர்ச்சி பெறவில்லை என்றால் தடை பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
அனைத்து மாதிரிகளையும் சேகரித்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிறந்த ஆய்வகத்திற்கு அனுப்பினோம். அவை அளித்த அறிக்கைகள் அதிர்ச்சி தரும் வகையில் இருந்தன என்று நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
கரூரில் ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவி கடத்தல்; மர்ம நபருக்கு வலைவீச்சு
10 Mar 2025கரூர் : கரூரில் ஒருதலை காதலால் கல்லூரி மாணவியை கடத்தி சென்ற மர்ம நபர் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-03-2025.
10 Mar 2025 -
தமிழர்கள் குறித்த பேச்சுக்கு கனிமொழி எதிர்ப்பு: எனது வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன் : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வருத்தம்
10 Mar 2025புதுடெல்லி : தமிழக அரசை, தமிழக எம்.பி.,க்களை, தமிழக மக்களை நாகரிகமற்றவர்கள் என நான் கூறினேன் என்று கனிமொழி கூறினார். நான் அவ்வாறு கூறவில்லை.
-
தூத்துக்குடி அருகே ஓடும் பஸ்சை மறித்து மாணவனுக்கு அரிவாள் வெட்டு: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
10 Mar 2025தூத்துக்குடி : ஓடும் பஸ்சை மறித்து மாணவனுக்கு அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அமைதியை நிலைநாட்டுவோம்: சிரிய மக்களுக்கு அழைப்பு விடுத்தார் அதிபர்
10 Mar 2025டமாஸ்கஸ் : சிரியாவில் அமைதியை நிலை நாட்டுவோம் என்று அதிபர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
சுனிதா வில்லியம்ஸ் வரும் 16-ம் தேதி பூமிக்குதிரும்புகிறார்: நாசா அறிவிப்பு
10 Mar 2025வாஷிங்டன், விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பும் தேதியை நாசா அறிவித்துள்ளது.
-
பார்லி. மக்களவையில் வாக்காளர் பட்டியல் குறித்து விவாதிக்க ராகுல் வலியுறுத்தல்
10 Mar 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
-
கராச்சியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பலி
10 Mar 2025கராச்சி, கராச்சியில் ஆப்கானியர்கள் தங்கியுள்ள முகாமின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானார்கள்.
-
இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு
10 Mar 2025சென்னை : லண்டனில் தனது முதல் சிம்பொனி அரங்கேற்றத்துக்பின் திங்கள்கிழமை சென்னை திரும்பிய இசைஞானி இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
நெல்லை, குமரி உள்பட தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை
10 Mar 2025சென்னை, தமிழகத்தில் மார்ச் 11 ஆம் தேதி (இன்று) கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
தமிழக எம்.பி.க்களை அநாகரிகமானவர்கள் என்பதா? - மத்திய கல்வி அமைச்சருக்கு நாவடக்கம் வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
10 Mar 2025சென்னை : நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.
-
நடிகை ரன்யா ராவுக்கு அரசு நிலம்: காங்கிரஸ் அமைச்சருக்கு தொடர்பா? கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு
10 Mar 2025பெங்களூரு, தங்கம் கடத்தல் வழக்கில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு அமைச்சருக்கு ரன்யா ராவுடன் தொடர்பு இருப்பது பற்றிய அதிர்ச்சி தகவல்கள் பரவி வருகிறது.
-
மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது: மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: கனிமொழி
10 Mar 2025புதுடெல்லி, மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும்" என்று கூறினார்.
-
போரூர் ஏரியில் மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய ஆண் சடலம்..!
10 Mar 2025சென்னை : போரூர் ஏரியில் மீனுக்கு விரித்த வலையில் ஆண் சடலம் சிக்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
தனுஷ்-நயன்தாரா வழக்கு விசாரணை: ஏப்ரல் 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு
10 Mar 2025சென்னை, தனுஷ்-நயன்தாரா வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல் 9 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
தமிழகத்திற்கு கல்வி நிதி தர மறுப்பு: தி.மு.க. கடும் எம்.பி.க்கள் அமளி; பார்லி. மக்களவை ஒத்திவைப்பு
10 Mar 2025புதுடெல்லி : தமிழகத்திற்கு கல்வி நிதி தர மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கடும் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
-
உலக நிறுவனங்களுக்கு தமிழ்நாடுதான் முகவரி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
10 Mar 2025சென்னை : இந்தியாவில் தொழில் நுழைவுவாயிலாக தமிழ்நாடு திகழ்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கச்சத்தீவு திருவிழா: படகுகளை இன்று ஆய்வு செய்யும் மீன்துறை அதிகாரிகள்
10 Mar 2025சென்னை : கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் படகுகள் குறித்து மீன்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்கின்றனர்.
-
மணிப்பூரில் 12 கிளர்ச்சியாளர்கள் கைது
10 Mar 2025இம்பால் : மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தடைசெய்யப்பட்ட ஆயுதக்குழுக்களை சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
-
7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி: பா.ம.க. நிழல் நிதி அறிக்கை வெளியீடு
10 Mar 2025விழுப்புரம் : அடுத்த 4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று பாமக நிழல் நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமான சேவைகள் அறிவிப்பு
10 Mar 2025சென்னை : சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி விமான நிலையங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
பார்லி. மக்களவையில் வாக்காளர் பட்டியல் குறித்து விவாதிக்க ராகுல் வலியுறுத்தல்
10 Mar 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
-
அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : அவசர அவசரமாக தரையிறக்கம்
10 Mar 2025டெல்லி : அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
திருவள்ளூரில் த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டம்
10 Mar 2025திருவள்ளூர் : தமிழகத்தில் நிகழும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக திருவள்ளூரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக தி.மு.க. வினர் போராட்டம்
10 Mar 2025சென்னை, தி.மு.க. எம்.பி.க்கள் பற்றி தவறாகப் பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதனுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.