முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூரில் 12 கிளர்ச்சியாளர்கள் கைது

திங்கட்கிழமை, 10 மார்ச் 2025      இந்தியா
Manipur-2025-03-10

Source: provided

இம்பால் : மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தடைசெய்யப்பட்ட ஆயுதக்குழுக்களை சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் குக்கி மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறையில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த வன்முறை சம்பவங்களால் அம்மாநில முதல்-மந்திரி பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, அம்மாநிலத்தில் குக்கி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் கடந்த 6-ம் தேதி வன்முறை வெடித்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி வன்முறையை கட்டுப்படுத்தினர்.

இந்நிலையில், மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பாதுகாப்புப்படையினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தேடுதல் வேட்டையில் தடைசெய்யப்பட்ட ஆயுதக்குழுவை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து