முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்டவாளத்தில் கிடந்த கியாஸ் சிலிண்டர்: பெரும் விபத்து தவிர்ப்பு : உ.பி. போலீசார் தீவிர விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2024      இந்தியா
UP-1 2024-03-22

Source: provided

பெரம்பூர் : உ.பி.யில் தண்டவாளத்தில் கியாஸ் சிலிண்டர் கிடந்ததை தொடர்ந்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து  தவிர்க்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி நேற்று காலையில் சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பெரம்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர் ஒன்று கிடந்தது. 

இதைக் கவனித்த டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தி ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே பாதுகாப்புப் பணியாளர்கள் சிலிண்டரை தண்டவாளத்தில் இருந்து அகற்றினர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முன்னதாக கடந்த 9-ம் தேதி பிரயாக்ராஜில் இருந்து பிவானிக்கு சென்று கொண்டிருந்த காளிந்தி எக்ஸ்பிரஸ் கான்பூர் அருகே தண்டவாளத்தில் கிடந்த கேஸ் சிலிண்டரில் மோதியது. இதைத் தொடர்ந்து பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதால், டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். 

இதையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தண்டவாளம் அருகே கேஸ் சிலிண்டர், பெட்ரோல் பாட்டில் மற்றும் தீப்பெட்டி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நாடு முழுவதும் ரயில்களை கவிழ்க்க 18 முயற்சிகள் நடந்துள்ளதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை நடந்த  24 சம்பவங்களில் கேஸ் சிலிண்டர்கள், சைக்கிள்கள், இரும்பு கம்பிகள் போன்ற பொருட்கள் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து