முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னை பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது : எடப்பாடி பழனிசாமி பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      தமிழகம்
EPS 2023 03 27

Source: provided

திருச்சி : தமிழகத்தில் திராணியற்ற அரசாங்கம் நடக்கிறது என்று குற்றஞ்சாட்டிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, என்னைப் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- விருதுநகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் என்னைப் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் சில விமர்சனங்களை தெரிவித்து இருகிறார். என்னைப் பற்றி முதல்வர் பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது.

10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்தது அதிமுக. ஜெயலலிதா ஆட்சியின்போது மக்கள் அதிகளவில் நன்மை பெற்றனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை வழங்கினோம். எனது ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள், 6 சட்ட கல்லூரிகளை கொண்டு வந்தோம்.

தமிழகத்தில் திராணியற்ற அரசாங்கம் நடக்கிறது. காவிரி குண்டாறு திட்டம் உள்ளிட்டவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. சேலத்தில் உள்ள கால்நடை பூங்காவை இதுவரை திமுக அரசு திறக்கவில்லை. திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதிமுக அரசின் திட்டங்களை திமுக புறக்கணிக்கிறது. கொரோனா காலத்தில் பாராட்டு, விருதுகளை பெற்றது அதிமுக அரசு. திமுக ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்துள்ளது. குற்றங்கள் அதிகரிக்க கஞ்சா போதையே காரணம். அரசியல் சூழ்நிலையை பொறுத்து கூட்டணி அமைக்கப்படும். அதிமுக தலைமையை ஏற்றுக்கொள்ளும் ஒத்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து