முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மருத்துவமனையில் மேற்கூரை இடிந்து விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2024      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

Source: provided

மதுரை : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து வழக்கு தொடர்பாக  சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்லூரி முதல்வர், பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று புற நோயாளிகள் பிரிவு கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 

இதில் கணினி மற்றும் கருவிகள் சேதம் அடைந்தன. நல்வாய்ப்பாக புறநோயாளிகள் காயம் அடைவது தவிர்க்கப்பட்டது. இதையடுத்து சேதம் அடைந்த கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பான செய்திகள் தொலைக்காட்சி மற்றும் செய்தி தாள்களில் வெளியாகின.

இதன் அடிப்படையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கட்டிட மேற்கூரை இடிந்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 

மருத்துவமனை மேற்கூரை இடிந்து விவகாரத்தில் என்ன நடந்தது? அதன் பரப்பளவு என்ன? கட்டிடம் கட்டப்பட்டு எவ்வளவு காலம் ஆகிறது?. மீட்பு நடவடிக்கை என்ன?. கட்டிடம் சீரமைக்கப்படுமா? அல்லது இடித்து புதிதாக அமைக்கப்படுமா?. வழக்கு தொடர்பாக சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்லூரி முதல்வர், பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிடப்படுகிறது என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து