முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்மேற்கு வங்கக்கடலில் புயல் சின்னம் வலுவிழந்தது

புதன்கிழமை, 13 நவம்பர் 2024      தமிழகம்
Puyal-ciam 2024-09-03

சென்னை, வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வலுவிழந்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது, வலுப்பெற்று, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக (புயல் சின்னம்)  உருவானது. அது வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி மெல்ல நகர்ந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் விறுவிறுப்பு அடைந்தது. கடந்த 3 நாட்களாக தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) நேற்று காலை நிலவரப்படி வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் இருந்து வடமேற்கு பகுதி நோக்கி நகர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்றும் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளது. வடதமிழகம் - தெற்கு ஆந்திரா கடலோரத்தில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துள்ளது. வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது" என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து