முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

14 மருத்துவக்கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2024      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

சென்னை, தமிழகத்தில் 14 மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராக சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராக பவானி, ஈரோடு மருத்துவக் கல்லூரி முதல்வராக ரவிக்குமார், குமரி மருத்துவக்கல்லூரி டீனாக ராம லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராக குமரவேல், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக அருள் சுந்தரேஷ் குமார், ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி டீனாக அமுதா ராணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மருத்துவக் கல்லூரி முதல்வராக தேவி மீனாள், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக லியூ டேவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வராக கலைவாணி, தேனி மருத்துவக் கல்லூரி முதல்வராக சித்ரா, கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக லோகநாயகி, விருதுநகர் மருத்துவக்கல்லூரி முதல்வராக ஜெயசிங் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக ரோகிணி தேவியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து