முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் பேருக்கு வேலை : ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2024      இந்தியா
Rahul 2024-09-09

Source: provided

சண்டிகர் : அரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு வருகிற இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், அரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

பா.ஜ.க.வால் பரப்பப்பட்ட 'வேலையில்லா திண்டாட்டம்' என்ற நோய், அரியானா இளைஞர்களின் எதிர்காலத்தையும், மாநிலத்தின் பாதுகாப்பையும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. இன்று இந்தியாவிலேயே அரியானாவில்தான் வேலையின்மை விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம், கடந்த 10 ஆண்டுகளில் மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ஒவ்வொரு அமைப்பின் முதுகெலும்பையும் பா.ஜ.க. உடைத்துவிட்டது.  தவறான ஜி.எஸ்.டி. மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சிறு வணிகங்களை முடக்கியது.

ராணுவத்திற்கு தயாராகும் இளைஞரின் மனஉறுதியை அக்னிவீர் திட்டம் உடைத்தது.மோசமான சட்டங்களால் விவசாய தொழில் செய்பவர்களின் தைரியம் தகர்ந்தது. விளையாட்டு வீரர்களுக்கான ஆதரவு பறிக்கப்பட்டு அவர்களின் கனவு சிதைக்கப்பட்டது. இதன் விளைவாக, போதைப் பழக்கத்தால் இளைஞர்களின் திறமை வீணாகிறது. விரக்தியடைந்த இளைஞர்கள் குற்றத்தில் ஈடுபடுகின்றனர்.

அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின்னர், 2 லட்சம் பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு, அரியானா போதையில்லா மாநிலமாக மாற்றப்படும். மாநிலத்தில் வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும், அனைத்து குடும்பங்களும் செழிப்பாக இருக்கும் என்றும் அரியானாவின் சகோதரிகளுக்கு நான் உறுதியளித்துள்ளேன். இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து