முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணமோசடி வழக்கு: முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2024      விளையாட்டு
Azharuddin 2024-10-08

Source: provided

ஐதராபாத் : பண மோசடி வழக்கு தொடர்பாக ஐதராபாத்  அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் நேற்று நேரில் ஆஜரானார்.

ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ரூ. 20 கோடிக்கு நிதி முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் பணமோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

61 வயதான அசாருதீனை கடந்த 3-ம் தேதியே ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், வேறு தேதியில் ஆஜராக அனுமதி அளிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் 8-ம் தேதி ஆஜராக அனுமதி அளிக்கப்பட்டது. 

அதன்படி நேற்று ஐதராபாத் பதே மைதான் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக அசாருதீன் நேரில் ஆஜரானார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து